Wednesday, January 31, 2018

புலவர் பிறப்பிடங்கள் :-

அற்புதமான தகவல்கள்
புலவர் பிறப்பிடங்கள் :-
*****************************
1) கம்பர் பிறந்த ஊர் – தேரழுந்தூர் (மயிலாடுதுறைக்கு அருகில்)
2) கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பிறந்த ஊர் தேரூர்
3) மருதகாசி பிறந்த ஊர் – மேலக்குடிக்காடு
4) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பிறந்த ஊர் செங்கப்படுத்தான்காடு
5) கண்ணதாசன் பிறந்த ஊர் சிறுகூடல்பட்டி
6) அந்தகக் கவி வீரராகவர் பிறந்த ஊர் – பூதூர்
7) குமரகுருபரர் பிறந்த ஊர் – திருவைகுண்டம்
8) மாணிக்கவாசகர் பிறந்த ஊர் திருவாதவூர்
9) கபிலர் பிறந்த ஊர் திருவாதவூர்
10) பாரதிதாசன் பிறந்த ஊர் புதுச்சேரி
11) நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார் பிறந்த ஊர் மோகனூர்
12) வாணிதாசன் பிறந்த ஊர் வில்லியனூர்
13) சுரதா பிறந்த ஊர் பழையனூர்
14) சர்.சி.வி.ராமன் பிறந்த ஊர் திருவானைக்காவல்
15) முடியரசன் பிறந்த ஊர் பெரியகுளம் (தேனி மாவட்டம்)
16) பாரதியார் பிறந்த ஊர் எட்டயபுரம்
17) காளமேகப் புலவர் பிறந்த ஊர் நந்தி கிராமம் (அ) எண்ணாயிரம்
18) திரு.வி.க . பிறந்த ஊர் தண்டலம் (துள்ளம்)
19) கியூரி எங்கு பிறந்தார் போலாந்து
20) முத்துராமலிங்க தேவர் பிறந்த ஊர் பசும்பொன்
21) இராமசாமி பிறந்த ஊர் ஈரோடு
22) இராமலிங்க அடிகளார் பிறந்த மாவட்டம் எது கடலூர்
23) இராமலிங்க அடிகளார் பிறந்த ஊர் மருதூர்
24) எம்.ஜி.ஆர் பிறந்த ஊர் கண்டி (இலங்கை)
25) ந.பிச்சமூர்த்தி பிறந்த ஊர் கும்பகோணம் (தஞ்சை மாவட்டம்)
26) கலைவானர் என்.எஸ்.கிருஷ்ணன் பிறந்த ஊர் ஒழுகநேரி
27) நல்லாதணார் பிறந்த ஊர் திருத்து
28) காமராசர் பிறந்த ஊர் விருதுநகர்
29) காந்தி பிறந்த மண் போர்பந்தர்
30) கணிதமேதை இராமானுஜன் பிறந்த ஊர் ஈரோடு
31) வைணவ ஆச்சாரியர் இராமானுஜர் பிறந்த ஊர் திருப்பெரும்புதூர்
32) குலசேகர ஆழ்வார் பிறந்த ஊர் திருவஞ்சைக்களம்
33) தேவநேய பாவணார் பிறந்த ஊர் சங்கரன்கோவில்
34) சிவப்பிரகாச சுவாமிகள் பிறந்த ஊர் தாழைநகர்
35) பூதத்தாழ்வார் பிறந்த ஊர் (மாமல்லபுரம்)காஞ்சிபுரம்
36) சுந்தரர் பிறந்த ஊர் திருமுனைப்பாடி
37) ஆதிசங்கரர் பிறந்த ஊர் காலடி (கேரளா)
38) குருநானக் பிறந்த ஊர் தாள்வண்டி
39) ராமானந்தர் பிறந்த ஊர் அலகாபாத்
40) தமிழ் தாத்தா உ.வே.சா பிறந்த ஊர் உத்தமதானபுரம்
41) திருவள்ளுவர் பிறந்த ஊர் மயிலாப்பூர்
42) தாராபாரதி பிறந்த ஊர் குவளை
43) அழகிய சொக்கநாத புலவர் பிறந்த ஊர் தச்சனூர்
44) மீனாட்சி சந்தரனார் பிறந்த ஊர் எண்ணெய் கிராமம்
45) தாயுமானவர் பிறந்த ஊர் திருமறைக்காடு (எ) வேதாரண்யம்
46) பரஞ்சோதி முனிவர் பிறந்த ஊர் திருமறைக்காடு (எ) வேதாரண்யம்
47) பூதஞ்சேந்தனார் பிறந்த ஊர் மதுரை
48) க.சச்சிதானந்தன் பிறந்த ஊர் பருத்தித்துறை
49) புகழேந்தி புலவர் பிறந்த ஊர் பொன் விளைந்த களத்தூர் (பெருங்களத்தூர்)
50) அசலாம்பிகை அம்மையார் பிறந்த ஊர் இரட்டணை
51) அஞ்சலையம்மாள் பிறந்த ஊர் முதுநகர் (கடலூர்)
52) வீரமாமுனிவர் பிறந்த ஊர் காஸ்திக்கிளியோன் (இத்தாலி)
53) செயங்கொண்டார் பிறந்த ஊர் தீபங்குடி
54) பாஸ்கரதாஸ் பிறந்த ஊர் மதுரை
55) எச்.ஏ.கிருட்டிணப்பிள்ளை பிறந்த ஊர் கரையிருப்பு
56) பெருஞ்சித்திரனார் பிறந்த ஊர் சமுத்திரம்
57) மீரா பிறந்த ஊர் சிவகங்கை
58) சேக்கிழார் பிறந்த ஊர் குன்றத்தூர்
59) திருநாவுகரசர் பிறந்த ஊர் திருவாமூர்
60) நீ.கந்தசாமி புலவர் பிறந்த ஊர் பள்ளியகரம்
61) சிற்பி பிறந்த ஊர் ஆத்துப் பொள்ளாச்சி
62) நா.காமராசன் பிறந்த ஊர் மீனாட்சிபுரம் (தேனி)
63) சாலை இளந்திரையன் பிறந்த ஊர் சாலை நயினார் பள்ளிவாசல்(நெல்லை)
64) சிவாஜி பிறந்த ஊர் சிவநேர்
65) முத்துசுவாமி தீட்சிதர் பிறந்த ஊர் திருவாரூர்
66) சியாமா சாஸ்திரிகள் பிறந்த தஞ்சாவூர்
67) ஆறுமுக நாவலர் பிறந்த ஊர் யாழ்ப்பாணம் நல்லூர்
68) நம்மாழ்வார் பிறந்த ஊர் ஆழ்வார் திருநகரி
69) வள்ளியம்மை பிறந்த ஊர் ஜோகன்ஸ்பெர்க்
70) உடுமலை நாராயணக்கவி பிறந்த ஊர் பூவிளைவாடி (பூளவாடி) என்னும் பூளைவாடி
71) ஜி.யூ.போப் பிறந்த ஊர் எட்வர்டு தீவு (பிரான்ஸ்)
72) திருப்பூர் குமரன் பிறந்த ஊர் சென்னிமலை
73) அண்ணாமலையார் பிறந்த ஊர் சென்னிகுளம்
74) டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பிறந்த ஊர் புதுக்கோட்டை
75) ஆனந்தரங்கர் பிறந்த ஊர் பெரம்பூர்
76) நம்பியாண்டர் நம்பி பிறந்த ஊர் திருநாரையூர்
77) தஞ்சை வேதநாயக சாஸ்திரி பிறந்த ஊர் திருநெல்வேலி (தஞ்சையில் படித்தார்)
78) மாயூரம் வேதநாயகம் பிள்ளை குளத்தூர் (திருச்சி)
79) மகாவீரர் பிறந்த ஊர் குன்டகிராமம்
80) புத்தர் பிறந்த ஊர் கபிலவஸ்து (லும்பினி)
81) அம்பேத்கர் பிறந்த ஊர் அம்பவாடே
82) அன்னை தெரசா பிறந்த நாடு அல்பேனியா
83) கவிக்கோ அப்துல் ரகுமான் பிறந்த ஊர் மதுரை
84) திரிகூடராசப்ப கவிராயர் பிறந்த ஊர் மேலகரம் (திருநெல்வேலி)
85) பொய் சொல்லா மாணிக்கம் பிறந்த ஊர் வயிரவன்கோவில்
86) தீரர் சத்தியமூர்த்தி பிறந்த ஊர் திருமயம்
87) சுப்பிரமணிய சிவா பிறந்த ஊர் வத்தலகுண்டு
88) பரிமேலழகர் பிறந்த ஊர் காஞ்சிபுரம்
89) அடியார்க்கு நல்லார் பிறந்த ஊர் நிர (கொங்கு நாடு)
90) அருணகிரிநாதர் பிறந்த ஊர் திருவண்ணாமலை
91) அருணாசல கவிராயர் பிறந்த ஊர்
92) இராமசந்திர கவிராயர் பிறந்த ஊர்
93) பட்டிணத்தார் பிறந்த ஊர்
94) வில்லிபுத்தூரார் பிறந்த ஊர் சனியூர் (திருமுனைப்பாடி நாடு)
95) ஒளவையார் பிறந்த ஊர் உறையூர் (சோழநாடு பாணர்குடி)
96) ஒட்டக்கூத்தர் பிறந்த ஊர் மலரி
97) திருமழிசை ஆழ்வார் பிறந்த ஊர் திருமழிசை
98) பேயாழ்வார் பிறந்த ஊர் மயிலாப்பூர்
99) பொய்கையாழ்வார் பிறந்த ஊர்
100) திருஞான சம்பந்தர் பிறந்த ஊர் சீர்காழி🌹🌹

Tuesday, January 30, 2018

*மூனுசுழி “ண” , ரெண்டுசுழி “ன” என்ன வித்தியாசம்?*

💐?💐💐💐💐💐
படிக்காதவர்க்கும் நல்ல தமிழைக் கற்றுத்தந்த

நடிகர்திலகம் சிவாஜி கணேசன்.

கண்ணப்பன் னு எழுதச்சொன்னா ஒருத்தன்

4சுழி 5சுழி போட்டானாம்!

என்னப்பா னு கேட்டதுக்கு அவன் கேட்டானாம்-

“தமிழ் வளரவே கூடாதாய்யா?

ரெண்டு சுழி மூனு சுழி இருக்கலாம்

4சுழி 5சுழி இருக்கக் கூடாதா?

இது எப்படி இருக்கு?

தமிழ் எழுத்துகளில் -

ரெண்டுசுழி ன என்பதும் தவறு!

மூனுசுழி ண என்பதும் தவறு!

ண இதன் பெயர் டண்ணகரம்,

ன இதன் பெயர் றன்னகரம் என்பதே சரி.

மண்டபம், கொண்டாட்டம் – என எங்கெல்லாம் இந்த மூனு சுழிணகர ஒற்றெழுத்து வருதோ, அதையடுத்து வர்ர உயிர்மெய் எழுத்து ட வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனால இதுக்குடண்ணகரம் னு பேரு. (சொல்லிப் பாருங்களேன்?)

தென்றல், சென்றான் – என எங்கெல்லாம் இந்த ரெண்டு சுழி னகரஒற்றெழுத்து வருதோ, அதையடுத்து வர்ர உயிர்மெய் எழுத்து ற வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனால இதுக்கு றன்னகரம் னு பேரு. (சும்மா சொல்லிப்பாருங்க?)

இது ரெண்டும் என்றுமே மாறி வராது..

(இதுல கூட பாருங்களேன்? பிரியாத காதலர்கள் மாதிரிச் சேந்து சேந்தே வர்ரதப் பாருங்களேன்! இது புரியாம இதுகள  நாம பிரிச்சுடக் கூடாதுல்ல?)

வேற மாதிரி சொன்னா

இதுவும் வர்க்க ஒற்றுமைதான்!

(வர்க்க எழுத்து-ன்னா,

சேந்து வர்ர எழுத்து! அவ்ளோதான்)

இந்தப் பெயரோடு (டண்ணகரம், றன்னகரம்)

இந்த ண, ன எழுத்துகளை அறிந்து கொண்டால்

எழுத்துப் பிழையும் குறையும்.

எப்புடீ?

மண்டபமா? மன்டபமா? சந்தேகம் வந்தா...

பக்கத்துல ட இருக்கா,

அப்ப இங்க மூனு சுழி ண தான் வரும்.

ஏன்னா அது டண்ணகரம்.

கொன்றானா? கொண்றானா? சந்தேகம் வந்தா...

பக்கத்துல ற இருக்கா

அப்ப இங்க ரெண்டு சுழி ன தான் வரும்.

ஏன்னா அது றன்னகரம்.

இதே மாதிரித்தான் ந கரம் என்பதை,தந்நகரம்னு சொல்லணும்

ஏன்னா இந்த ந் எழுத்தை அடுத்து

வரக்கூடிய உயிர்மெய் த மட்டுமே. (பந்து, வெந்தயம், மந்தை)

இது மாதிரி தெரிஞ்சிக்கணும் னு

நெனைக்கிறவங்க மட்டும்

தொடர்ந்து படிக்கலாம்.

(தெரிஞ்சவுங்க பின்னூட்டத்த இட்டுட்டு

அடுத்த பதிப் பார்க்கப் போகலாம்)

நல்ல உச்சரிப்புக்கு..
செய்தியாளர் ஷோபனா ரவி

தமிழில் எந்த எழுத்தின்  பின் எந்த எழுத்து வரும் என்பதை அடிப்படையாக வைத்தே (க ங ச ஞ ட ண  எனும் வரிசையில்) மெய்யெழுத்துகள் பதினெட்டும் வரிசைப்படுத்தி அமைக்கப்பட்டுள்ளன.

தமிழின் மெய்யெழுத்து வரிசை அமைப்புக்கும் அர்த்தமுண்டு.
இதைப் புரிந்துகொண்டால், எழுத்துப் பிழை பெரும்பாலும் வராது. உச்சரிப்பும் தெளிவாகும். (என்ன..? இதெல்லாம் பாடத்தில் வராது!)

இது பற்றித்தான் இந்தப் பதிவு. சரியா?

உதாரணமாக-

க ங ச ஞ ட ண த ந ப ம ய ர ல வ ழ ள ற ன – எனும் பதினெட்டு மெய்யெழுத்துகளும் சும்மா அடுத்தடுத்து வைக்கப்பட்டுவிட வில்லை!

இவை, உச்சரிக்கும் முறையின்படியே இப்படி வைக்கபட்டன.

உச்சரிப்பின்படி இவற்றை மூன்று வகையாகப் பிரித்துள்ளனர்

இதை எல்லாரும் படித்திருப்போம்-

வல்லின எழுத்துகள் – க ச ட த ப ற (இவை ஆறும், வன்மையாக நெஞ்சிலிருந்து உச்சரிக்கப்பட வேண்டும் எனவே வல்லெழுத்துகள்)

மெல்லின எழுத்துகள்–ங ஞ ண ந ம ன (இவை ஆறும், மென்மையாக மூக்கிலிருந்து உச்சரிக்கப்பட வேண்டும் எனவே மெல்லெழுத்துகள்)

இடையினஎழுத்துகள்–ய ர ல வ ழ ள (இயை ஆறும் வன்மையாகவோ மென்மையாகவோ அன்றி இடைப்பட்ட கழுத்திலிருந்து உச்சரிக்கப்பட வேண்டும் எனவே இவை இடையினம்)  இதுவும் தெரிஞ்சதுதான்.

எளிமையாகச் சொல்லக் கூடிய இந்த வல்லின, மெல்லின, இடையின எழுத்துகளை வரிசையாகச் சொன்னாலே 18எழுத்துகள் வந்துவிடும்.

கசடதபற ஙஞணநமன யரலவழள – 18எழுத்து வருதுல்ல..? இப்படியே இவை மூன்று வகையையும் வரிசைப்படுத்தாமல் கஙசஞடண என்று ஒரு புதிய வரிசையைக் கண்டுபிடித்து வைத்ததற்குக் காரணம் உண்டு.

சொற்களில், மெல்லினத்தை அடுத்து

வல்லின எழுத்துகள் வரும்.

(ஆனால் எழுத்து வரிசையில் வல்லினத்தை அடுத்து மெல்லினம் வருவதற்கு சொல்முறை எளிமையே காரணமாக இருக்கலாம்)

க ங – எங்கே – ங் க

ச ஞ – மஞ்சள் – ஞ் ச

ட ண – துண்டு – ண் ட

த ந -  வந்தது – ந் த 

ப ம – பம்பரம் – ம் ப

இடையின ஆறெழுத்தும்
அவற்றின் பெயருக்கேற்ப
(உச்சரிப்பும் வன்மையாகவும் இன்றி
மென்மையாகவும் இன்றி இடையினமாக)
செருகப்பட்டு, கடைசியாக

ற ன – சென்றது – ன் ற

அவ்வளவு தாங்க...

உலகே இந்த இரட்டை எதிர்த்துருவ
ஈர்ப்பில் தானே இயங்குகிறது??!!

நெட்டை னா குட்டை

பள்ளம் னா மேடு

தொப்பை னா சப்பை

ஆணுன்னா பெண்.

வல்லினம் னா மெல்லினம். (அப்படின்னா பெண்கள் லாம் மெல்லிய மலர்தானா ன்னா , அது அவங்கவுங்க பார்வையப் பொறுத்தது. முரண்படும் இருவரில் ஒருவர் அனுசரித்துப் போவதுதான் வாழ்க்கை. அது ஆணா பெண்ணா என்பது அவரவர் விருப்பம், சூழல்.               ரெண்டும் வெடச்சிக்கிட்டு நின்னா வேதனைதான்)

ஒரு கிலோ அல்வா ஒரே மூச்சுல சாப்புட முடியுமா?

முடியும் னு நினைக்கலாம் ஆனா சாப்பிட முடியாது.

அதே அல்வாவோடு, கொஞ்சம் காராபூந்தி சேத்துக்கிட்டா கொஞ்சம் கொஞ்சமா ரெண்டையும் சாப்பிட்டு விடலாம்ல... அப்படித்தான்! வல்லினத்தை அடுத்து மெல்லினம் அமைக்கப்படுவது தமிழியல்பு.

இதே மாதிரித்தான் -

சின்ன ர என்பதும் தவறு!

பெரிய ற என்பதும் தவறு!

ர - இதனை, இடையின ர கரம் என்பதே சரியானது

- மரம், கரம், உரம்

ற - இதனை வல்லின ற கரம் என்பதுதான் சரி

- மறம், அறம், முறம்

இதுல ஒரு வேடிக்கை பாருங்ளேன்!
சிறிய என்னும் சொல்லில் பெரிய ற வருது!
பெரிய என்னும் சொல்லில் சிறிய ர வருது!

வல்லினத்துக்கும் மெல்லினத்துக்கும்

இடையில வர்ரது இடையினம்.

அட நம்ம நடுத்தர வர்க்கம் னு வச்சிக்குங்களேன்...

வலுத்த கோடீஸ்வர வர்க்கம் (வல்லின எழுத்து)

வறுமைப் பட்ட ஏழை வர்க்கம் (மெல்லின எழுத்து)

இடையில லோல் படுற நடுத்தர வர்க்கம்! (இடையின எழுத்து)

வாழ்க்கை முறையை

இப்படி எழுத்து அமைப்பிலும் வச்ச

நம்ம தாத்தமாரு-பாட்டிமாருக

எப்பேர்ப்பட்ட ஆளா இருக்கணும்? யோசிங்க...

இதுல வல்லெழுத்து ரெண்டும் சேர்ந்து வராது.

சிலபேரு “முயற்ச்சி“ னு எழுதறது தப்பு.

என்னதான் கடுமையான முயற்சியா இருந்தாலும்

அது முயற்சிதான் !

இதே மாதிரித்தான்

உயிரெழுத்தில்

அ-ஆ

இ-ஈ

உ-ஊ

எ-ஏ

ஐ-இ 

ஒ-ஓ - என வரும இன  எழுத்துகள்

கவிதை எழுதுவோர்க்கு இந்த எதுகை மோனை

(ஓசை ஒழுங்கு) அறிந்து

எழுத்துகளைப் போட்டால் கவிதை சுவைக்கும்,

படிப்பவர் நினைவில் நிலைக்கும்.

அப்பறம் நீங்க வேற ஏதாவது கேட்டா,

எனக்குத் தெரிஞ்சத சொல்றேன்.

எனக்குத் தெரியலன்னா -

தெரிஞ்சிகிட்டு வந்து சொல்றேன்.

சரீங்களா?

வணக்கம்.

Sunday, January 28, 2018

சாகர்மாலா திட்டம்

சாகர்மால திட்டத்தை எதிர்த்து கன்யாகுமரியில் 3000பேர் உண்ணாநிலை போராட்டம்



சாகர்மாலா எனும் சவமாலை
சாகர்மாலா எனும் சவமாலை
சாகர்மாலா திட்டம் அதாவது கடல்மாலைத் திட்டம் எனும் நாசகார திட்டம் இந்திய ஒன்றித்திலேயே மிகப்பெரிய செலவில் வரவுள்ள திட்டமாகும்.
அதூவது 8 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
(அதாவது ஒவ்வொரு இந்தியக் குடிமகனிடம் இருந்தும் ரூ.6400 இந்த திட்டத்திற்கு போகிறது).

இது 2003 ல் வாஜ்பாய் பா.ஜ.க அரசால் பெரிதாக வெளியே தெரியாமல் தொடங்கப்பட்டு மன்மோகன் காங்கிரஸ் அரசால் மறைமுகமாக நடைமுறைப்படுத்தப்பட்டு இன்று பா.ஜ.க அரசால் முக்கிய கட்டத்திற்கு வந்துள்ளது.
இத்திட்டத்திற்கு மேற்கண்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்திருந்த அத்தனை கட்சிகளும் உடந்தை.

- - - - - - -
சுருக்கமாக:-

இந்திய ஒன்றியத்தின் கடற்கரை ஒட்டி பல வளங்கள் உள்ளன.
*அவற்றை தொழிற்சாலை அமைத்து சுரண்டுவார்கள்.

*வெளிநாட்டிற்கு விற்க வசதியாக கடற்கரை வரை சாலைபோடுவார்கள்

*கப்பலேற்ற வசதியாக புதிய துறைமுகங்கள் கட்டுவார்கள்

*அந்த துறைமுகங்களுக்கு மக்களிடமிருந்து பாதுகாப்பு கொடுக்க வசதியாக ராணுவ முகாம்கள் ஏற்படுத்தி அம்முகாம்களை அகலமான கடற்கரை சாலைகள் அமைத்து இணைப்பர் மற்றும் தீவுகளில் ராணுவ தளங்களை அமைப்பார்கள்.

(இவ்வாறு அனைத்து வளங்களையும் கப்பலேற்றி அனுப்பவுள்ளனர்.
ஆனால் கூறுவதோ இந்தியாவின் பழைமையான கடல்வணிகத்தை மறுபடி கொண்டுவருகிறோம் என்று.
அதாவது தமிழர்களின் கடல்வழி வணிகத்தை இவர்கள் இந்தியாவின் பெயரில் போட்டுக் கொள்கின்றனர்.

மேற்கண்ட எல்லாமே மத்திய அரசு பணத்தை கார்ப்பரேட் முதலாளிகளிடம் கொடுக்க அவர்கள் கான்ட்ராக்டர்கள் மூலம் செய்வார்கள்.
இதனால் வரும் லாபம் மொத்தமும் அவர்களுக்கே!
மக்களுக்கு நட்டம் மட்டுமே!)

* 12 பிரம்மாண்ட துறைமுகங்களும் 200 சிறிய துறைமுகங்களும் கட்டவுள்ளனர்.

* 1208 தீவுகளை தனியாரிடம் ஒப்படைக்க உள்ளனர்

* 7500 கி.மீ நீளமுள்ள கடற்கரை சாலை போடவுள்ளனர்

* 1450 கடல்வழி பாதைகளும் 76 ரயில்வழி பாதைகளும் 101 ஆற்றுவழி பாதைகளும் போடவுள்ளனர்

* 12 ஸ்மார்ட் சிட்டிகள் அமைக்கவுள்ளனர்.
(அதாவது பூர்வகுடிகளை வெளியேற்றிவிட்டு வடயிந்தியரை அனைத்து வசதிகளுடன் குடியேற்றுதல்)
- - - - - - - - -


இந்த திட்டம் 4 தலைப்புகளில் பிரிக்கப்பட்டுள்ளது.


1) துறைமுக நவீனப்படுத்தல் :-

இந்திய கடற்கரை 14 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டும்.
அதில் 3 தமிழக கடற்கரையை முற்றாக விழுங்கியபடி உள்ளன.
முதலில் இந்த பகுதி மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்கு மாற்றப்படும்.
அதில் தமிழக அரசு எந்த தலையீடும் செய்யமுடியாது.
(ஏற்கனவே எல்லைப் பகுதிகளை மலையாளி, தெலுங்கர், கன்னடர் விழுங்கிவிட்டனர்.
தற்போது கடற்கரையை ஹிந்தியர் விழுங்கவுள்ளனர்)

பிறகு இந்த நிலங்கள் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கொடுக்கப்படும்.
(இங்கே புரோக்கர் வேலையை மட்டுமே அரசாங்கம் செய்கிறது)

பிறகு மீனவ மக்களின் குடியிருப்புகளைக் காலிசெய்து  அவர்களை வெளியேற்றுவர்.
(ஏற்கனவே 30 கிராமங்களை வெளியேற்றிவிட்டனர்)

பிறகு துறைமுகம் கட்டுதல், சாலை போடுதல், கடலை ஆழமாக்கல், திட்டத் தொழிலாளர் குடியிருப்பு அமைத்தல் போன்றவை நடக்கும்.
- - - - - - - -

2) துறைமுக இணைப்பு :-

துறைமுகங்களுக்கு சுரண்டிய வளங்களை கொண்டுவர வசதியாக ரயில், சாலை, ஆறு, பைப்லைன் ஆகியன போடப்படும்.

கடற்கரையை ஒட்டி 60 முதல் 200 மீட்டர் அகலமுள்ள சாலைகள் போடப்படும்.
இது சாதாரண சாலைகளாக இருக்காது.
இராணுவ டாங்கிகள் நகர்வதற்கென்றே உறுதியான அகலமான சாலைகள் போடப்படும்.  இதுபோக ஆங்காங்கே ராணுவ விமானங்கள் இறங்கும் தளங்களும் அமைக்கப்படும்.
இதற்கான அனுமதியை முதலில் முந்திக்கொண்டு கொடுத்துவிட்டது தமிழக அரசு.
(இங்கே செக்யூரிட்டி வேலை மட்டுமே அரசு பார்க்கிறது)
- - - - - - -
3) துறைமுகங்களை தொழிற்சாலை மயமாக்கல்

ஏற்கனவே இருக்கும் துறைமுகங்களை நன்கு நவீனப்படுத்தி விரிவாக்குவர்.
அதில் தொழிற்சாலைகளும் கட்டுவர்.

இதன்மூலம் அதானி உள்ளிட்ட பணமுதலைகள் ஆஸ்திரேலியாவில் தோண்டி எடுக்கும் நிலக்கரியை சிரமமில்லாமல் இறக்குமதி செய்யும்.
( இதிலும் ஒரு கொடுமையான நகைச்சுவை உண்டு.
ஒரு டன் நிலக்கரியை ஆஸ்திரேலியாவிடம் அரச நிறுவனமான கோல் இந்தியா  ரூ.25,000 கொடுத்து வாங்கி அதை ரூ.2,500 க்கு கார்ப்பரேட்களுக்கு கொடுக்கும்.
இத்தனைக்கும் ஆஸ்திரேலியாவிடம் பணம் வாங்கிக்கொண்டு நிலக்கரியை வெட்டி எடுத்து அனுப்புவது இதே கார்ப்பரேட்கள்தான்.
அதாவது அரசாங்கம் இங்கே டிரைவர் வேலை மட்டும் பார்க்கிறது.
இந்த வெட்டியெடுக்கும் கான்ட்ராக்ட்டை  ஆஸ்திரேலியாவிடம் பேசி அதானிக்கு வாங்கித்தரத்தான் மோடி ஆஸ்திரேலியாவே போனார்.
இதற்கே வாய்பிளந்தால் எப்படி?
ஏற்கனவே 'நிலக்கரி மூலம் மின் உற்பத்தி செய்து தாருங்கள்' என பத்தாண்டுகள் முன்பே டாடா மற்றும் அம்பானிக்கு 45,000 கோடி சென்ட்ரல் வங்கியில் கடன் வாங்கி கொடுத்துள்ளது மத்திய அரசு.
அவர்கள் 'நிலக்கரி தாருங்கள் ஆரம்பிக்கிறோம்' என்று இன்றுவரை வேலையைத் தொடங்கவில்லை)

இப்போதே அதானியிடம் 11 பெரிய துறைமுகங்கள் உள்ளன.
இத்திட்டம் மேலும் 6 துறைமுகங்களை வழங்கும்
(இதில் ஒன்று தமிழகத்தில் வரும்)

இறக்குமதி அதானி என்றால் ஏற்றுமதி கார்ப்பரேட் சாமியாரான பாபா ராம்தேவ்.
ஒரு சைக்கிளில் வாழ்க்கையை ஆரம்பித்த சாமியார் ஹிந்துத்வா சக்தி மூலம் இன்று இந்திய ஒன்றியத்தின் மூன்றில் ஒரு பங்கு உணவுச் சந்தையை கட்டுப்படுத்தும் அளவு வளர்ந்துவிட்டார்.
இவர் முக்கியமாக உணவுப் பொருள் மற்றும் சித்த மருத்துவ பொருட்களை ஏற்றுமதி செய்து இன்னொரு அதானி  ஆகவுள்ளார்.

தமிழகத்தில் முதலில் விவசாய நிலங்களை அழித்து மீத்தேன் அதாவது ஹைட்ரோகார்பன் எடுத்து விற்பார்கள்.
இந்த மீத்தேன்தானே அதற்கு கீழே இருக்கும் நிலக்கரியை எடுக்க தடையாக இருக்கிறது?
எனவே வேகவேகமாக மீத்தேன் எடுத்தபிறகு மண்ணையெல்லாம் தோண்டி நிலக்கரி, பெட்ரோல் என எல்லாவற்றையும் எடுத்து விற்பார்கள்.
இதுபோக மலைகளை வெட்டி கிரானைட், மணலை அள்ளி தாது,  பாலாற்றை நாசமாக்கிய தோல் தொழிற்சாலை உற்பத்தி, நொய்யல் ஆற்றை நாசமாக்கிய துணி உற்பத்தி, சிமெண்ட் உற்பத்தி, மற்றும் இறைச்சி மீன்வகைகளை பதப்படுத்தி உற்பத்தி என தமிழகத்தையே மொட்டையடிக்க உள்ளனர்.
- - - - - -
 4) கடலோர சமூக மேம்பாடு :-

பெரும்பாலும் கடல்சார் தொழிலைச் செய்யும் கடலோர மக்களை தொழில்செய்யவிடாமல் கெடுத்து படிப்படியாக இவர்களை காலி செய்து அகதியாக அலையவிட்டுவிட்டு அந்த இடத்தில் இந்த திட்டத்தோடு தொடர்புடையோர் குடியமர்த்தப்படுவர்.
அதாவது ராணுவ முகாம், ராணுவ குடியிருப்பு, எஞ்சினியர் மற்றும் பணியாளர்களுக்கான குடியிருப்பு.
இவைகளே ஸ்மார்ட் சிட்டி என்று வசதியான குடியேற்றம்.
இதுபோக லேபர் காலணி, அதற்கான கடைகள், கட்டடங்கள், விடுதிகள் என கடற்கரை முழுக்க பல இனங்களைச் சேர்ந்த கார்ப்பரேட் சமூகம் குடியேற்றப்படும்.
இதுதான் இவர்கள் கூறும் டெவலப்மெண்ட்.

அதாவது இந்திய கடற்கரையை ஒட்டி மீனவ கிராமங்களுடன் ஏறத்தாழ 3600 ஊர்கள் மற்றும் நகரங்கள் உள்ளன.
கடலோரம் 25 கோடி மக்கள் வாழ்கின்றனர்.
இவர்களை ஒழித்துவிட்டு
1 கோடி பேருக்கு வேலை தருவார்களாம்.
அதிலும் 10% வரையான வேலைவாய்ப்பு நிரந்தர வேலையாக இருக்கலாம்.
மற்றபடி அனைத்து வேலைகளும் கான்ட்ராக்ட் முறைப்படிதான்.
அதிலும் பெரும்பாலும் எடுபிடி வேலைகள்.
இதுதான் இவர்கள் கூறும் வேலை வாய்ப்பு.

ஏற்கனவே 30 கிராமங்களை காலி செய்துவிட்டனர்.
நல்லதண்ணி குப்பம் சமீபத்தில் போலீசை விட்டு அடித்து நொறுக்கப்பட்டு காலிசெய்யப்பட்டது.
மாற்றுநிலம் மாற்றுத்தொழில் என எதுவும் வழங்கப்படவில்லை.

200 வீடுகள், பள்ளி, கோவில், வாக்குச்சாவடி கொண்ட தனுஷ்கோடி வாழத்தகுதியற்ற இடம் என்று அறிவித்தது இதனால்தான்.

கடற்கரை அருகே பழமையான ஒரு கோவிலைக்கூட இடித்துள்ளனர்.
தமிழரது பழமைக்கான அகழ்வாராய்ச்சி தளங்கள் கடற்கரையை ஒட்டி உள்ளன.
அவை அனைத்தும் அழிக்கப்படும்.

தீவுகள் தனியாருக்கு சொந்தமாகும்.
தனியாருக்கு பாதுகாப்பாக கடற்படை ராணுவ தளங்களும் அமைக்கப்படும்.
(இங்கே ஒரு ரவுடியின் வேலையை மட்டும் அரசாங்கம் செய்கிறது)

- - - - - -
சாகர் மாலா எனும் இந்த திட்டம் மக்களை மண்ணோடு சேர்த்து அழிக்க போடப்படும் ஒரு சவமாலை.


இந்தியாவில் தனி ஹெலிகாப்டர் வைத்திருக்கும் சில கார்ப்பரேட் முதலாளிகள், பத்து தலைமுறை ஆனாலும் செலவு செய்யமுடியாத பணமாக பூட்டிவைக்கப்பட உள்ளது இந்த அத்தனை கொடூரங்களின் லாபமும்.

இந்த தாய்த் திட்டத்தின் கீழ் 126 துணைத் திட்டங்கள் உள்ளன.
அவையே கதிராமங்கலம், நெடுவாசல் ஆகிய திட்டங்கள்.

இந்த திட்டம் சுற்றுசூழலுக்கு முற்றிலும் எதிரான திட்டம்.
எந்த திட்டமாக இருந்தாலும் சுற்றுசூழல் மாசடையாமல் எப்படி கையாள்வது என்று தலைப்பு பெயருக்காவது இருக்கும்.
இதில் சுற்றுசூழல் எனும் வார்த்தையே வரவில்லை.
இத்திட்டத்திற்கு எந்த சுற்றுசூழல் அனுமதியும் வாங்கப்படவில்லை.
வாங்கவும் படாது.

மோடி நியமித்த சுற்றுச்சூழல் அமைச்சர் பதவியேற்றவுடன் செய்த முதல்வேலை 'தொழிற்துறை வளர்ச்சிக்கு சுற்றுச்சூழல் துறை தடையாக இருக்காது' என்றும்
'தொழில் வளர்ச்சிக்கு விரைவாக சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்படும்' என்றும் அறிவித்து
எந்த திட்டத்திற்கும் முதல் அவசியமான சுற்றுச்சூழல் மதிப்பீடு ஆய்வு தேவையில்லாயல் ஆக்கப்பட்டதுதான்.
சாகர்மாலா காற்றை மாசாக்கும், விளைநிலத்தை சாக்கடையாக்கும், நிலத்தை சுடுகாடாக்கும், மழையைத் தடுக்கும், கடலை மாசாக்கும், நிலத்தடி நீரை கெடுக்கும், உணவு உற்பத்தியை பாதிக்கும், இனப்படுகொலை நடத்தும், மழைப்பொழிவைத் தடுக்கும், பஞ்சம் வரவைக்கும்
கடைசியாக மனிதர் மட்டுமன்றி பல லட்சம் உயிர்களைக் கொல்லும்.
பூமியில் ஒரு பகுதியையே நாசமாக்கும்.

எண்ணூர் பக்கம் கடலில் எண்ணெய் கொட்டியபோதே வாளியால் அள்ளிக்கொண்டிருந்த லட்சணத்தில் எதை நம்பி நாம் சாகர்மாலா போன்ற நாசகார திட்டங்களுக்கு இடம் கொடுப்பது?

இதை நாம் வருமுன் தடுக்கவேண்டும்.
வரும்பொழுது தடுக்கலாம் என்று நினைக்கவேண்டாம்.
ஆரம்பகட்ட வேலைகள் தொடங்கிவிட்டன.
இன்னும் கொஞ்சநாட்களில் ஹிந்தியாவின் இராணுவ டாங்கிகள் வர ஆரம்பிக்கும்.
அதன்பிறகு நாம் ஒன்றும் செய்யமுடியாது.


பூமித்தாய்க்கு எதிரான இந்த திட்டத்திற்கு நாம் உடன்பட்டால் நம்மைப் போன்ற ஒரு துரோகி யாருமில்லை.

முடிந்த அளவு ஊடகங்களால் மறைக்கப்பட்டு மெல்ல மெல்ல நடந்துவரும் இந்த திட்டம் பற்றி வேறு எந்த இனத்தவருக்கும் விழிப்புணர்வு இல்லை.

தமிழர்களுக்கு மட்டுமே ஓரளவு விழிப்புணர்வு உள்ளது.
இதை தடுக்க நாம்தான் களத்தில் இறங்கவேண்டும்.
தலைமை ஏற்கவேண்டும்.

தகவல்களுக்கு நன்றி:
திரு. இங்கர்சால் (Tamil research institute)
__________________________________

எதாவது செய்யுங்கள் தமிழர்களே!

புலிகள் வழியில் ஆயுதம் தாங்கி பல ஆயிரம் பேரைக் கொன்றேனும் இந்த திட்டத்தை நிறுத்தினால் அந்த படுகொலை கூட நியாயமாகவே கருதப்படும்.

ஏனென்றால் ஆயுதப் போராட்டத்தை முன்கூட்டியே கணித்து ராணுவ மயமாக்கப்பட்ட திட்டமாகவே இது வரவுள்ளது.

ஜனநாயக வழிகள் ஹிந்தியாவில் உதவாது என்பது கண்கூடான வரலாறு!


ரைட்.....

சாகர் மாலா பற்றியும்... இன்னிக்கு பார்த்திடுவோம்...

அதாவது 
சாகர் - கடல்... மாலா - ஒன்றை ஒன்றுடோடு இணைப்பது (உதாரணமாக மாலை கட்டுவது போல.. இது சரியான விளக்கம் இல்லைன்னாலும்... ஏறத்தாழ பொருந்தும்..)

ஆச்சா...

இப்போ இந்த சாகர் மாலா / பாரத் மாலா அப்படிங்கிறதோட சுருக்கமான விளக்கத்தை பார்ப்போம்....

சிம்பிளாக ஒரு கொரியர் கம்பெனியை ஞாபகம் வச்சுக்கோங்க....
(ABT பார்சல் சர்வீஸ் பிரபலமானது..)

இந்த கொரியர் கம்பெனி எப்படி ஒவ்வொரு முக்கியமான நகரம், மாவட்டத்திலயெல்லாம்... தங்களுக்குன்னு ஆபீஸ் போட்டு... பொருளை கைமாத்துறாங்களோ... அதையே... அராசங்கம் கொஞ்சம் பெரிய அளவுல பண்ணுது... 

எப்படின்னா... 

மெட்டீரியல் எல்லாம் பொதுமக்கள் போற ரோட்டுல போகாமல்... அதெல்லாம் முடிஞ்சவரைக்கும் கடல்ல கொண்டுபோறது... அதாவது தமிழ்நாட்டுல இருந்து காஷ்மீர் போகவேண்டிய சரக்கை... குஜராத் வரைக்கும் கடல்ல கொண்டு போயிட்டு... குஜராத்ல இருந்து தரைவழியாக கொண்டுபோறது...

ஒரு நாளைக்கு தமிழ்நாடுல இருந்து குறைஞ்ச பட்சம் 50 லாரி சரக்கோட... பஞ்சாப், ஹரியானா, காஷ்மீர்னு போகும்பட்சத்தில்... அந்த 50 லாரி சரக்கையும் ஒரு கார்கோ போட்லயோ... கார்கோ கப்பல்லயோ ஏற்றி... குஜராத் வரைக்கும் கொண்டுபோறது... அங்கிருந்து தரைவழியாக இடம்மாற்ற வேண்டியதுதான்... 

உள்நாட்டுக்குள்ள நீ்ர்வழி போக்குவரத்து சாத்தியமாகும் பட்சத்தில்.. எங்கேயெல்லாம் நீர்வழியை பயன்படுத்த முடியுமோ... அங்கேயெல்லாம்... நீர்வழியாகவே சரக்கை கொண்டு போறது...

இதற்கு வசதியாக சரக்கை லோட்  ஆன்/ ஆஃப் பண்ண தேவையான கட்டமைப்புகளை உருவாக்குவது... 

மத்தபடிக்கு மீனவர் தொழில் அழியும்... மீனவர்கள் அழிவார்கள்னு சொல்றதெல்லாம் சும்மா கப்சா.. 

என்ன ஒன்னு... கஞ்சா கடத்த முடியாது... எல்டிடிஇ இருந்த காலத்துல... டீசல் , பெட்ரோல் கடத்தினது போல... கடற்கரை முழுக்க நிலத்துல அரசோட பார்வையும்... தண்ணியில்... கடற்படையோட பார்வையுமாக இருக்கும்...

நம்பர் 1 தவிர பாக்கி எல்லா நம்பர்லயும் பிஸ்னஸ் பண்ணியே பழகினவனுகளுக்கு கடற்கரைதான் சொர்க்க பூமி... 

அதைதான் இந்த பாரத் / சாகர் மாலா திட்டம் உடைக்கப்போகுது... 

தப்புப்பண்ண முக்கியமான தேவை... கேட்பாரற்ற இடம்... 
ஆனால் இந்த திட்டம் மூலம்... குட்டிக்குட்டி கார்கோ கப்பல்கள்... கார்கோ போட்கள்னு குறுக்கும் மறுக்கும் ஓடிக்கிட்டு கெடந்தால்...
எப்படி நிம்மதியா தொழில் பண்ண முடியும்??

இதென்ன 1000₹ கஞ்சா பொட்டலம் கைமாத்துற விசயமா?? என்னதான் கூட்டம் இருந்தாலும்.. போற போக்குல கைமாத்திட்டு போறதுக்கு.. 

போட்ல இருந்து இன்னொரு போட்டுக்கு கைமாத்தனும்... 
பெரிய தலைவலி பிடிச்ச வேலை...

ஏற்கனவே எக்குத்தப்பா நேவி கிட்டயும், கோஸ்ட் கார்டு கிட்டயும் மாட்டிக்கிற நேரத்துல... குறுக்கும் மறுக்கும் மற்ற மற்ற போட்டும், கப்பலும் போய்வந்தால்... அவிக வாழ்வாதாரம் என்னாவது..???

அதனாலதான் கத்துறாய்ங்க... 

இந்தியாவுல உள்ள இன்னொரு பெரிய தொல்லை... இந்த நேஷனல் பர்மிட் லாரிகள்... 
NH முழுக்க... NP லாரிகளோட அட்டகாசம் அதிகம்... 

இப்போ... கடல் வழி போக்குவரத்து... உள்நாட்டு நீர்வழி போக்குவரத்து சாத்தியமாகும் பட்சத்தில்... ஏறத்தாழ 70% அளவுக்கு ரோடுல போற சரக்கை ரோட்டுல போகாமல் தடுக்க முடியும்... 

ரோடு பொது மக்கள் பயன்பாட்டுக்கு பயன்படும்... 

உதாரணத்துக்கு சொல்லனும்னா... குஜராத்ல தயாரிச்சு... திருச்சிக்கு நேஷனல் பர்மிட் லாரில வரும் வண்டிகள்... பாரத் மாலா /சாகர் மாலா திட்டத்துக்கு பிறகு... கப்பலேறி புதுக்கோட்டை வந்திடும்... 
ஊருக்குள்ள சரக்குலாரிகள் குறுக்கும் மறுக்கும் போவது குறையும்...

அம்புட்டுதான்...

ரோடு ட்ராபிஃக் , ஏர், சவுன்ட் பொல்யூசன் சிட்டிக்குள்ள குறையும்... 

இதில் சிக்கலே இல்லியான்னா... இருக்கு... 

புயல் நேரத்துல ... போக்குவரத்து தாமதம் ஆகும்... 

அம்புட்டுதான்....

Saturday, January 27, 2018

TNPSC GROUP -IV+VAO



இன்று முதல்  குரூப் 4  படிக்க வேண்டியவை
வெற்றியை நிர்ணயிப்பது ...
1.மொழி பாடம்  திருப்புதல் குறைந்தது ஒரு நாளைக்கு ஒரு புத்தகம்  6 மற்றும் 8  வது புத்தகம்  ஒரே நாளில் ஏற்கனவே நன்று படித்து இருந்தால் மீண்டும் படித்து விடலாம்   ...
2.மற்ற மொழி பாடம்  7 ஒரு நாள்
3.9 மற்றும் 10 வது மொழிபாடம் ஒவ்வொன்றிற்கும் 2நாள்
4.நடப்பு நிகழ்வுகள்  நாள் ஒவ்வொன்றிற்கும் ஒரு மாதம்  குறைந்தது 2017 மே முதல்  ஜனவரி 2018 வரை
5.கணிதம் முக்கியமாக பார்க்க வேண்டும்
6.அரசியலமைப்பு எளிதில் மதிப்பெண் பெறலாம்
ஒருமுறை திருப்புதல் அவசியம்
 ஏற்கனவே படித்த பாடங்கள் மட்டும் திருப்புதல் செய்யலாம் . .காலம் பொறுத்து...புதியதாக எதுவும் படிக்க வேண்டாம் ..
7.மொழிபாடம் 11  மற்றும் 12 வது புத்தகம் ஒரு நாளில்  படிக்கலாம் ..
8.பழைய தேர்வு வினாத்தாள் பயிற்சி பெற வேண்டும் ....
9.மேற்கண்ட நான்கு எவ்வளவு  பயிற்சி மற்றும் திருப்புதல் செய்கின்றீர்களோ அதுதான் உங்கள் வெற்றியை தீர்மானிக்கும் ....
10.எல்லா புக்கும் படித்தவர்கள் மீதி இருக்கின்ற அந்த பேஸ்புக் படிக்க சென்று விடாதீர்கள் ......
11.எத்தனை இலட்சம் பேர் தேர்வு  எழுதுகிறார்கள் என்பது முக்கியம் அல்ல...எப்படி பயிற்சி மற்றும் முயற்சி செய்து உள்ளார்கள் என்பது முக்கியம்
12.கட் ஆப் குறித்து கவலைபட தேவையில்லை..
உங்களுக்கு தேவை ஒரு இடம் ...ஒரு காலி பணியிடம் இருந்தாலும் அது உங்களுக்கு தான் என்பதை விட எனக்கு மட்டும் தான் என்ற நம்பிக்கையில் தேர்வு எழுத செல்லுங்கள்....
13.தேர்வாணையம் பற்றிய புகார் குறித்து குரூப் 4 மற்றும் 2  அளவில் கவலைபட தேவையில்லை ..
14.தேர்வு பற்றிய அடுத்த பதிவில் விரைவில் சந்திப்போம் ....